நிலுவை வழக்குகளை குறைக்க மகளிர் கோர்ட்டு கூடுதல் போக்சோ சிறப்பு கோர்ட்டாக மாற்றம்
- கோவை மாவட்டத்தில், ஆண்டுதோறும் அதிக போக்சோ வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.
- நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை யை குறைக்க, கூடுதல் போக்சோ கோர்ட்டுகள் திறக்க அரசு உத்தர விட்டுள்ளது.
கோவை,
சிறுமிகள் மீதான பாலியல் குற்ற செயல்கள் தொடர்பாக, பதிவாகும் வழக்குகளை விசாரிக்க, கோவையில் போக்சோ சிறப்பு கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில், ஆண்டுதோறும் அதிக போக்சோ வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், நிலுவை வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தாண்டில் நவம்பர் வரை, 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டை விட, 180 வழக்குகள் அதிகமாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை யை குறைக்க, கூடுதல் போக்சோ கோர்ட்டுகள் திறக்க அரசு உத்தர விட்டுள்ளது.
கோவை மகளிர் கோர்ட்டில், சுமார் 40 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இதனால், மகளிர் கோர்ட்டு கூடுதல் போக்சோ சிறப்பு கோர்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தை திருமணம் உள்ளிட்ட 80 போக்சோ வழக்குகள், மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற உள்ளது.