உள்ளூர் செய்திகள்

அரபிக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தபோது எடுத்த படம்

உடன்குடி அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2023-05-18 08:54 GMT   |   Update On 2023-05-18 08:54 GMT
  • பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
  • முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக் வழங்கினர்.

உடன்குடி:

உடன்குடி பெரிய தெரு இமாம் மகளிர் அரபிக் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாக்கள் 4 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் அபு உபைதா தலைமை தாங்கினார்.வரலாற்று கண்காட்சியை ம.ம.க. மாநில நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் பெண்களுக்கு சிறப்பு பயான், மாணவிகளின் சிற்றுரைகள், மாணவிகள், உலமாக்களின் பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், பல்வேறு அரபிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ஜஹபர் சாதிக் சிராஜி வாசித்தார்.

முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக், தையல் சான்றிதழ்களை ஜக்கரியாவும் வழங்கினர். கல்வியின் நோக்கம், ஒழுக்கமான வாழ்க்கைக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் ஆகியவை குறித்து ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஹாஜி அப்துல் கரீம் பேசினார். உடன்குடி ஓன்றிய அளவில் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ்பேகம், சித்தி ஷபீனா, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சலீம், மகபூப் மற்றும் திரளான இஸ்லாமிய அறிஞர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News