திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2950 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
- இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன
- திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 2,950 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில் விடுபட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4ந் தேதி வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 19,23,574 நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 18,11,686 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 1,23,027 நபர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும் மாவட்டத்தில் தற்போது வரை 2.5 லட்சம் நபர்கள் 2ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் 11.8 லட்சம் நபர்கள் 3ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணை செலுத்தாமல் விடுபட்டவர்கள் மற்றும் 3ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொருட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 2,950 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில் விடுபட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றின் கடுமையான பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.