உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-11-21 09:10 GMT   |   Update On 2023-11-21 09:10 GMT
  • பொதுமக்கள் பலரும் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.
  • போராட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதிக்கான புகார் களை தெரிவிப்பதற்காக மனுக்களுடன் மாநகராட்சி குறைதீர் கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.

ஆனால் மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் என யாரும் அங்கு வரவில்லை. இதனால் சில மணி நேரங்கள் அங்கே பொது மக்கள் காத்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சி லர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்களும் மனு அளிக்க வந்தபோது அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News