உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக புதிய பணியிடங்கள் உருவாக்கம்

Published On 2022-10-26 05:13 GMT   |   Update On 2022-10-26 05:13 GMT
  • தமிழகத்தில் சென்னை நீங்கலாக 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
  • உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஓட்டுனநர்கள் போன்ற கூடுதல் பணியிடங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் நகராட்சியாக இருந்தபோது உள்ள பணியாளர்களே செயல்பட்டு வந்தனர். இதனால் பல்வேறு பணிகளில் மந்தநிலை காணப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளை சிறப்புநிலை அ பிரிவு மாநகராட்சிகளாகவும், சேலம், திருச்சி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை சிறப்பு நிலை ஆ பிரிவு மாநகராட்சிகளாகவும் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகள் தேர்வு நிலை மாநகராட்சி எனவும், 3 முதல் 5 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் நிலை 1 மாநகராட்சியாகவும், அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட திண்டுக்கல் மற்றும் சிவகாசி மாநகராட்சிகள் நிலை 2 பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின்பும் மண்டல அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான செயல்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பணிகளுக்கும் பல்வேறு இடங்களில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கே மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை ஆணையர் பணியிடம் மட்டுமே உள்ளது.

4 மண்டலங்களுக்கும் தனித்தனியாக உதவி ஆணையர்கள், நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர வருவாய் பிரிவிற்கு ஒரு உதவி ஆணையாளர் என மொத்தம் 5 ஆணையாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கு அலுவலர், மாமன்ற செயலாளர், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு உதவி வருவாய் அலுவலர் என ெமாத்தம் 4 உதவி வருவாய் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஓட்டுனநர்கள் போன்ற கூடுதல் பணியிடங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கான தேவைகள் உடனுக்குடன் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

மேலும் அத்தியாவசிய பணிகள் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News