உள்ளூர் செய்திகள்
தஞ்சை அரசு கல்லூரியில் படைப்புத்திறன் பயிலரங்கம்
- கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
- குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவர் குறைதீர் மன்றம் மற்றும் கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை வகித்து பேசும்போது, பெண்களுடைய உணர்வு களை அவர்கள் பதிவு செய்யும் போதுதான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்றார்.
எழுத்தாளர் சசிகுமார், கவிஞர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.
மாணவி யோகப்பிரியா, உதவி பேராசிரியை தங்கமதி, விடுதி காப்பாளர் மெகருனி சாபேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் இந்திரா காந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா மற்றும் குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.