சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
- தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.
- புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
சங்கரன்கோவில்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை பால்வளத்துறை மற்றும் ஆவின் இணைந்து நடத்திய கடன் வழங்கும் நிகழ்ச்சி 0.1884 சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் (பால்வளம்) நெல்லை மற்றும் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.
மேலும் 80 பயனாளி களுக்கு தாட்கோ மூலம் வங்கி கடன் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. விழாவில் அரசின் சார்பில் பால்வளத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மேலும் மாட்டுக்கடன்கள் குறித்து உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் 0.1884 சங்கரநயினார்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செய லாட்சியர், தாட்கோ மேலாளர், தென்காசி, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர், சங்கரன்கோவில் கனரா வங்கி முதன்மை மேலாளர், சங்கரன்கோவில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி முதுநிலை ஆய்வாளர் (பால்) தென்காசி நன்றி கூறினார்.