உள்ளூர் செய்திகள்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு: மருத்துவ சேவை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

Published On 2023-08-04 08:55 GMT   |   Update On 2023-08-04 08:55 GMT
  • மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
  • கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

கடலூர்:

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரின் நேரடி கவனத்திற்க்கு வாட்ஸ் அப் (82487 74852) எண் மூலம் அளிக்கபடுவதனை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பிரித்தனுப்பப்பட்டு தீர்வுகாணும் வகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு, வளாக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சாரா செலின் பால், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News