கடலூரில் நெய்தல் புத்தக திருவிழா: நாளை தொடங்குகிறது
- தினசரி பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.
- விழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் "நெய்தல் புத்தக திருவிழா," 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை கடலூர் சில்வர் பீச்சில் நடைபெறுகிறது. இதற்காக 45 புத்தக அரங்கு களும், அரசின் பல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்கு களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த கொள்கை விளக்க பொருட் காட்சியும் அமைக் கப்பட்டுள்ளது. மேலும் மாணவ- மாணவிகளி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தினசரி பிரபல பேச்சாளர்க ளின் பட்டிமன்றம், சொற் பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 28 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாண வர்களின் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் பள்ளி களுக்கே சென்று மாண வர்களை ஏற்றிவரவும், விழா முடிந்ததும் மீண்டும் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.
மேலும் இங்கு வரும் குழந்தைகளுக்காக அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகள், தமிழர் கலாசாரத்தை பறை சாற்றும் வகையி லான கலைநிகழ்ச்சிகளும் நடை பெறும். புத்தக திருவிழா வுக்கு வருபவர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடலுக்கு செல்லாத வகை யில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தக திருவிழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படா மல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உடனிருந்தார்.