உள்ளூர் செய்திகள்

 சென்ராய பெருமாள் கோவில் பகுதியில் உள்ள மேட்டூர் அணை நீர் தேக்க பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள சோளம் தற்போது அறுவடைக்கு தயாராகி இருப்பதை படத்தில் காணலாம்.  

சாகுபடி செய்யப்பட்ட சோளம் பயிர் அறுவடைக்கு தயார்

Published On 2023-04-19 10:16 GMT   |   Update On 2023-04-19 10:16 GMT
  • அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
  • நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர்.

மேட்டூர்:

மேட்டூர் அணையின் மொத்த நீர்ட்டம் 120 அடி ஆகும். அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் நீர்த்தேக்கம் பரப்பை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் செய்வது வழக்கம் .

இதன் அடிப்படையில் தற்போது அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். தற்போது இந்த சோளம் பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

Tags:    

Similar News