உள்ளூர் செய்திகள்

பேருந்தில் படியில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களை படத்தில் காணலாம்.

ராயக்கோட்டையில் படியில் தொங்கிய படி ஆபத்தான பயணம்

Published On 2023-07-27 09:23 GMT   |   Update On 2023-07-27 09:23 GMT
  • காலை, மாலை என இரு நேரமும் டவுன் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.
  • பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு பள்ளிகளுக்கு சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் இருந்து மாணவ, மாணவிகள், காலை, மாலை என டவுன் பஸ்களில் வந்து படித்து விட்டு செல்கின்றனர்.

மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களும் டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர். இதனால் காலை, மாலை என இரு நேரமும் டவுன் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

அதனால் பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மகளிருக்கு இலவசம் என்பதால் அவர்கள் வேறு பஸ்களில் செல்லாமல் இதே பஸ்களில் சென்று வருகின்றனர்.

எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்களை விட மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News