உள்ளூர் செய்திகள்

கோவை ஓட்டலில் அழுகிய நிலையில் வியாபாரி சடலம் மீட்பு

Published On 2023-09-13 09:23 GMT   |   Update On 2023-09-13 09:23 GMT
  • நெல்லையில் இருந்து தொழில் விஷயமாக கோவைக்கு வந்தவர்
  • ஜவுளிக்கடை உரிமையாளர் மரணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை

கோவை,

நெல்லை அருகே உள்ள பேட்டையை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன் ஜஹாங்கீர் சலாம் (வயது 34). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 10-ந் தேதி நெல்லையில் இருந்து தொழில் விஷயமாக கோவைக்கு வந்தார். பின்னர் ஜஹாங்கீர் சலாம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் 4-வது மாடியில் அறை எடுத்து தங்கி னார். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் இருந்த தூர்நாற்றம் வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஜஹாங்கீர் சலாம் படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது. இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜஹாங்கீர் சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News