- சங்கமத்துறை அருகே 150 க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன.
- குட்டையில் வளர்க்கப்பட்ட இறால்கள் செத்து மிதந்தன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரிப்பம்பட்டினம் ஊராட்சி பூம்புகார் காவிரி சங்கமத்துறை அருகே 150 க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன.
இவற்றிற்கு நடுவே மந்தகரையை சேர்ந்த தனமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 2 இறால் குட்டைகள் உள்ளன.
இந்நிலையில் தன மூர்த்தியின் இறால் குட்டையில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து குட்டையில் வளர்க்கப்பட்ட இறால்கள் டன் கணக்கில் செத்து மிதந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தனமூர்த்தி இது குறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் அங்கு கடந்த விஷ பாட்டிலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த இரண்டு குட்டைகளிலும் விஷம் கலந்ததால் இறந்த இறால்களின் மதிப்பு ரூ 40 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.