உள்ளூர் செய்திகள்

உக்கடம் பஸ் நிலைய கட்டிடம் இடிக்க முடிவு

Published On 2023-01-22 09:15 GMT   |   Update On 2023-01-22 09:15 GMT
  • கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.
  • பணிகள் நாளை தொடங்கும் என கூறப்படுகிறது.

கோவை

கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.430 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த மேம்பாலம் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி கரும்புகடை வரை முதல் கட்டமாகவும், கரும்புகடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது.

இதில் முதல் கட்ட மேம்பால பணிகள் 90 சதவீதம் வரை முடிந்து விட்டது.இந்த மேம்பாலத்தின் குறுக்கே உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனை புதைவட மின்சார கேபிள் மூலம் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.9 கோடியில் பணிகள் நடைபெற்றது .

இதுதவிர லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வட்ட வடிவில் அமையும் இறங்கு தளம் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து வசதிக்காக உக்கடம் பஸ் நிலையம் மாற்றி அமைக்கபட உள்ளது. இதையடுத்து உக்கடம் பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த பணிகள் நாளை தொடங்கும் என கூறப்படுகிறது.  

Tags:    

Similar News