உள்ளூர் செய்திகள்

மான் மீட்கப்பட்ட காட்சி.


வாசுதேவநல்லூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

Published On 2022-06-16 08:53 GMT   |   Update On 2022-06-16 08:53 GMT
  • 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
  • மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சக்கரை ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இரண்டு வயதுள்ள மான் ஒன்று தவறி விழுந்தது. 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு நிலைய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா மானை வாசுதேவநல்லூர் ரேஞ்சர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

Tags:    

Similar News