உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவிக்கு பட்டத்தை துணைவேந்தர் குமார் வழங்கிய போது எடுத்தபடம்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 650 மாணவர்களுக்கு பட்டம்- காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்

Published On 2022-10-23 06:43 GMT   |   Update On 2022-10-23 06:43 GMT
  • பட்டமளிப்பு விழாவிற்கு, கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
  • மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர் ஷண்மதி, நேஷனல் பொறியியல் கல்லூரிச் செயலர் சங்கரநாராயணன், இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல், தொழி லதிபர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்பவும் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள். நாம் எப்படி சாதிக்க முடியும், எப்படி முன்னேறுவது என்று சிந்தியுங்கள்.அப்போது தான் மாணவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறலாம் என்றார்.

தொடர்ந்து, இளநிலை பொறியியல் மாணவர்கள் 638 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 12 பேருக்கும் துணைவேந்தர் குமார் பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்றவர்களில் 39 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கல்லூரி முதல்வர்கள் ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர், முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலைவாணி, ரமணன் மற்றும் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News