கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கல்
- 21 வகையான சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
- கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
கோட்டூர் அடுத்த ஆதிச்சபுரத்தில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோட்டூர் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், கோட்டூர் வட்டார திட்ட அலுவலர் அபிநயா முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாம்பூலம், குங்கும சிமிழ், புடவை, வெற்றிலை, பாக்கு, பூ, வளையல், பழங்கள் உள்பட 21 வகையான சீர்வரிசை பொருட்களை 100 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.
விழாவில் தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்க ப்பட்டது.
இதில் டாக்டர் பிரியங்கா, மேற்பார்வையாளர்கள் தமிழ்செல்வி, சுசீலா, விஜயா, திட்ட உதவியாளர் பிரபு, அலுவலக உதவியாளர் அருண்ராஜ், கோட்டூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை பணியாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.
முடிவில் பணியாளர் கனகா நன்றி கூறினார்.