உள்ளூர் செய்திகள்

கொல்லப்பள்ளியில் இருந்து எனு சோனை செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கால்வாயில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.

புதர்மண்டி கிடக்கும் கால்வாய்களை தூர்வார கோரிக்கை

Published On 2023-07-11 07:18 GMT   |   Update On 2023-07-11 07:18 GMT
  • கால்வாய் நடுவிலே மரங்கள், செடிகள் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள நிலையில் உள்ளது.
  • அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீரான நீர் பாதைகள் அமைக்க வேண்டும்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளியில் இருந்து எனுசோனை கிராமம் செல்லும் சாலை வழியில் இரண்டு சிறிய பாலங்கள் உள்ளன.

இந்த பாலங்களில் தியாகரசனப்பளி ஏரியில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீர் மோதுகுளப்பள்ளி, பாளையம், மேல்பாளையம், அழகுபாவி வழியாக இந்த பாலம் வழியாக சென்னப்பள்ளி, சின்னார், முருக்கனப்பள்ளி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

இந்த உபரி நீர், மழை நீரால் கால்வாய் கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இரப்பதம் பெற்றும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் வசதி பெற்று பல ஆண்டு முன்பு பெற்று வந்தனர்.

தற்போது கடந்த சில ஆண்டு காலமாக இந்த கால்வாய் தூர்வாரபடாமல் முட்புதர் மண்டி கால்வாய் நடுவிலே மரங்கள், செடிகள் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள நிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொழிற்சாலையினர் கால்வாய்களை ஆக்கிரமித்து வருவதால் கால்வாய்கள் இருப்பது தெரியாத நிலைஉள்ளது. இந்த நிலமையை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீரான நீர் பாதைகள் அமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News