30 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
- கால்வாய் செல்லும் பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர்.
- ஜே.சி.பி எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர்.
கோவை,
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மசக்காளிபாளையம் 52, 53-வது வார்டுகளில் உள்ள ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் சிலர் மழைநீர் வடிகால் கால்வாய் செல்லும் பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். இது சம்பந்தமான புகார்கள் மாநகராட்சி கமிஷனருக்கு வந்தது. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று காலை கிழக்கு மண்டல உதவி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மசக்காளிபாளையம் ரோட்டிற்கு சென்றனர். அவர்கள் மழை நீர் வடிகால் கால்வாய் செல்லும் பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளை ஜே.சி.பி எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர்.
இதனை ஒட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.