உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

சேலம் அருகே வீடுகள் இடிப்பு, விவசாய பயிர்கள் அழிப்பு

Published On 2023-05-22 09:52 GMT   |   Update On 2023-05-22 09:52 GMT
  • 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
  • வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.

எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.

ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News