உள்ளூர் செய்திகள்

கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

அறநிலைய துறையினருக்கு தெரியாமல் அம்மன் கோவில் சுற்றுச்சுவர் இடிப்பு

Published On 2023-03-25 10:28 GMT   |   Update On 2023-03-25 10:28 GMT
  • பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு சமுதாய மக்களின் குடிபாட்டு கோவிலாக உள்ளது.
  • 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து சமய அறநி லையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்குட்பட்ட திடுமல்புதூரில் அப்பச்சிமார், ராக்கி யண்ணன், பேச்சியம்மன் கோவில் உள்ளது. இது பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு சமுதாய மக்களின் குடிபாட்டு கோவிலாக உள்ளது.

700 ஆண்டுகள் பழமை

சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து சமய அறநி லையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் ஆலோசனை பெறப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கோவிலை சிறப்பாக கட்டி முடிக்க திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டுமென கூறினர். மற்றோரு பிரிவினர் திருப்பணி கமிட்டி அமைக்கா மல் தாங்களே முன்னின்று கோவிலை கட்டி முடிப்ப தாகவும் தெரிவித்தனர். இரு தரப்பினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கூட்டம் முடிவுற்றது.

சுற்றுச்சுவர் இடிப்பு

இந்நிலையில் திருப்பணி கமிட்டி அமைக்க முன்வராத தரப்பினர், இந்து சமய அறநிலையத் துறைக்கும், கமிட்டி அமைக்க கோரிய தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்காமல் கோவிலின் சுற்றுசுவர் மற்றும் பெரும்பா லான பகுதிகளை இடித்து பாலாலயம் செய்யும் பணி களை மேற்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த, இந்து சமய அறநி லையத்துறையின் பரமத்தி வேலூர் தாலுகா கோவில் ஆய்வாளர் ஜனனி, நல்லூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

6 பேர் மீது வழக்கு

அதன்பேரில் திடுமல் பகுதியை சேர்ந்த சசிகுமார், லட்சுமணன், பாலசுப்பிர மணி மற்றும் ஈரோடு மாவட்டம் அமராவதிபுதூரை சேர்ந்த சந்திரசேக ரன், ரமேஷ், சின்னசாமி ஆகியோர் மீது இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கோவிலை, அனுமதி இல்லாமல் இடித்து திருப்ப ணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News