நிறுத்தப்பட்ட ரெயில்களை இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
- காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும்.
- கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
நாகப்பட்டனம்:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வணிக சங்கங்கள், சேவை சங்கங்கள், லயன்ஸ் கிளப், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம், நாகை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம், நாகை இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம், மீனவ கிராம பஞ்சாயத்தாரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உடனடியாக காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கோஷங்கள் எழுப்பினர்.