உள்ளூர் செய்திகள்

கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது எடுத்தப்படம்.

கடலூரில் புதிய பஸ் நிலையத்தை மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-30 10:00 GMT   |   Update On 2023-09-30 10:00 GMT
  • தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

கடலூர்:

கடலூர் புதிய பஸ் நிலையத்தை கடலூரின் மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி, திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

தலைவர் பாலு பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமை ப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் பேசினார். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜசேகரன், பன்னீர்செல்வம், செல்வகணபதி, கோமதிநாயகம், கோபால், பாஸ்கர், காசிநாதன், தில்லைநாயகம், வீராசாமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார். 

Tags:    

Similar News