- மணிப்பூா் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
மணிப்பூா் மற்றும் ஹரியாணாவில் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்டச் செயலா் ஜெயினுல் ஆபிதீன் தலைமை வகித்தாா்.
இதில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, ம.தி.மு.க தெற்கு மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வன், தஞ்சாவூா் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை ஹாஜாமைதீன் மிஸ்பாகி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை, பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேவையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ஜெய்சங்கா், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் ஒற்றுமை மேடை தலைவா் ஜீவக்குமாா் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலா் அகமது கபீா், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவா் அப்துல் நசீா், கிறிஸ்துவ நல்லிணக்க இயக்க மாவட்டச் செயலா் மோசஸ் ஜான் கென்னடி, அறநெறி மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் சாா்லஸ் உள்பட பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.