உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

தென்னை மரம் ஏறும் கருவி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

Published On 2022-12-24 09:31 GMT   |   Update On 2022-12-24 09:31 GMT
  • தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
  • கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.

தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.

இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.

தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-

இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.

இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News