உள்ளூர் செய்திகள்

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன்.

ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி 14-ந் தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-08 10:18 GMT   |   Update On 2023-10-08 10:18 GMT
  • டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன.
  • மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநிலங்களையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

விடுதலைத் தமிழ்ப்புலி கள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

காவிரியில் சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பேசி வருவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தி ற்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும்.

காவிரி பிரச்சினையை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்வு காண வேண்டும். தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி ஆணையம் கொடுத்த உத்தரவை பின்பற்றி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

உரிய நீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன.எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே எஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியும். அடுத்து சம்பா சாகுபடியை தொடங்குவதே கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 40,000 ஏக்கருக்கு மட்டும் ஹெக்டேர் 1க்கு ரூ. 13,500 அதாவது ஏக்கருக்கு ரூ. 5400 மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது எந்த வகையில் பொருந்தும். இதை விவசாயிகள் ஏற்கக்கூடிய அறிவிப்பாகுமா?.

எனவே,தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

காவிரி நீர் விவசாயிகள் வாழ்வாதர உரிமைகள் என்பதை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி நல்ல முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனே காவிரி நீர் திறந்து விடக்கோரியும், பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் வரும் 14-ந் தேதி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் உழவர் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News