உள்ளூர் செய்திகள்
கடலூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எம்.எல்.ஏ, மேயர் பங்கேற்பு
- மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கடலூர்:
கடலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலும் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில் மதனா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷ்ணி ராஜா, டாக்டர் காரல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.