நெல்லை மாநகர பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
- நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப நெல்லை மாநகராட்சியில் சாக்கடை வாறுகால்கள் தூர்வாரி கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது, சாலைகளை பெருக்கி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி சுகா தாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் இன்று டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்லும் சாலையில் உள்ள சாக்கடை வாறுகால் தூர்வாரும் பணி கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று நடைபெற்றது. தொ டர்ந்து நயினார் குளம் மார்க்கெட்டில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலை பெருக்கி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தெரு க்களில் இருபுறமும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
முன்னதாக டவுன் கல்லணை மகளிர் பள்ளியில் மாணவிகளிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பேட்டையில் உள்ள சரக்கு முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.