உள்ளூர் செய்திகள்

மாணவிகள் தென்னை மரம் ஏறும் கருவி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்த காட்சி.

சிவகிரி அருகே தென்னை மரம் ஏறும் கருவி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

Published On 2023-01-25 09:07 GMT   |   Update On 2023-01-25 09:07 GMT
  • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.
  • இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் இணைந்து தென்னை மரம் ஏறும் கருவி குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன், சுமிதா பாரதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை மரம் ஏறும் கருவி குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News