உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-07 08:13 GMT   |   Update On 2022-07-07 08:13 GMT
  • ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
  • அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியங்களில் செம்பந்தனிருப்பு, காரை மேடு, கீழசட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

கீழ சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம், நீளம் அகலத்தை ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து காவளம்பாடி பகுதியில் 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டார், பின்னர் காவளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி யில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் அப்பள்ளியின் பழமையான கட்டிட இடிபாடுகளை அகற்றி விரைவில் பள்ளியை சீரமை ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பள்ளியை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விழந்திட சமுத்திரம் ஊராட்சியில் பாதரக்குடி கிராமத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பேபர் பிளாக் சாலையை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைராஜ், ரமணி ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News