உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

தேவிபட்டணத்தில் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம்

Published On 2023-05-12 08:35 GMT   |   Update On 2023-05-12 08:35 GMT
  • வார்டுகள் முழுவதும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாத தெருக்களாகவும் உள்ளன.
  • கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகிரி:

சிவகிரி அருகே தேவி பட்டணத்தில் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் மாட சாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தேவிபட்ட ணம் ஊராட்சி மன்றம் எல்லைக்குட்பட்ட 12 வார்டுகள் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாறுகால்கள் மற்றும் சிமெண்ட் தளம் இல்லாத பள்ளமான தெருக்களா கவும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத தெருக்களாகவும் உள்ளன. ஆகவே 12 வார்டுகளிலும் போர்க்கால அடிப்படையில் வாறு கால்கள் மற்றும் சிமெண்ட் தளங்கள் அமைக்க வேண்டும் உட்பட 28 தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

இதில் வார்டு உறுப்பி னர்கள் ராமராஜ், ஆர்.தங்க ராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News