உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டியில் கார்த்திகை முதல் தேதி மாலையணிந்து, விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்களை படத்தில் காணலாம்.

பண்ருட்டியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2022-11-17 08:35 GMT   |   Update On 2022-11-17 08:35 GMT
  • நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
  • அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1-ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில், காமராஜர் நகர் சக்தி விநாயகர் கோவில், சோமேஸ்வரன் கோவில், ஆகிய திருக்கோவில்களில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து விரதமிருக்கக்கூடிய அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் மாலை அணிந்து சுவாமியே சரணம் அயயப்பா என்ற பக்தி கோசங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில் பகுதி முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

Similar News