உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசைக்காக உப்புத்துறை வழியாக சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள்

Published On 2023-08-16 05:18 GMT   |   Update On 2023-08-16 05:18 GMT
  • உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது
  • வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர்.

வருசநாடு:

விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகில் அமைந்து ள்ள சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்ல தாணிப்பாறை வழியாகவும், தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும் 2 பாதைகள் உள்ளது. உப்புத்துறை பகுதி மேகமலை வனச்சரணா லயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த பாதை வருடம் முழுவதும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிச னத்துக்காக நேற்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்புத்துறை கிராமத்திற்கு வந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேகமலை வனப் பாதுகாப்பு வன சரகர் சாந்தினி தலை மையிலான வனத்துறையி னர் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறை யினர் யானைக்கஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கோவி லுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்ப ட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர். அதேபோல மயிலாடு ம்பாறை போலீ சாரும் தொடர்ந்து பாது காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News