உள்ளூர் செய்திகள்

பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

Published On 2023-02-19 09:36 GMT   |   Update On 2023-02-19 09:36 GMT
  • 500-க்கும் மேற்பட்டோ பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தனர்.
  • இரவு முழுவதும் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனை பிரார்த்தித்து சென்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆதிரங்கம்சேகல் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், பெரியதம்பிரான்இருளன் , பெரியநாயகி ஆகிய காவல் தெய்வங்களுக்கு மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மருளாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பால்குட ங்கள் எடுத்தனர்.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மேளதாளத்துடன் பால்குடம் புறப்பட்டு கோவிலின் தீர்த்த குளத்தை வளம் வந்து கருவறையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி இரவு முழுவதும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனை பிரார்த்தித்து சென்றனர்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் மருளாளிகள் அறக்கட்ட ளை சார்பில் தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News