தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
- விடுமுறை தினம் என்பதால் பலரும் குடும்பமாக வந்திருந்தனர்.
தென்காசி:
தமிழ் புத்தாண்டு உலக தமிழர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. அதனைமுன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பொதுமக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். தென்காசி யில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் தென்காசி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலையில் காசி விஸ்வநாதர் கோவிலின் முகப்பு பகுதி மற்றும் உள் பிரகாரங்களில் தமிழ் புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் பலரும் தங்களின் குடும்பமாக வந்திருந்தனர். மேலும் முக்கிய பஜார்கள் எங்கும் கூட்டம் அலைமோதியது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் தென்காசி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.