உள்ளூர் செய்திகள்

முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு மாத்திரை வழங்கினார்.

அரசு பள்ளியில் குடற்புழு நீக்க முகாம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-02-16 09:51 GMT   |   Update On 2023-02-16 09:51 GMT
  • குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
  • அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.

முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.

பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News