சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், வாயில் அலகு குத்தியும் மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.
- கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் கீழ்மாத்தூர் ஊராட்சியில் தருமபுரம் ஆதீனம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒட்டங்காட்டில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தி மேளதாளங்கள் முழங்க வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தீக்குண்டத்தில் இறங்கினர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
திருக்கடையூர் கோவில் நிர்வாகிகள் தீமிதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் விஜேந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொன்டனர்.
இதேபோல் இலுப்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் 23- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.