கெலவரப்பள்ளி அணை பகுதியில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி
- மாநில அளவிலான வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
- மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் போன்ற ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஓசூர்,
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக கெலவர ப்பள்ளி அணையில் ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி முன்னி லையில்,
வெ ள்ளத்தில் சிக்கி யவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்பது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ க்குழுவினர் சிகிச்சை அழிப்பது, மழைக்கா லங்களில் மரம் முறிந்து, மின் இணைப்புக்கள் துண்டிப்பு போன்ற நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் போன்ற ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.