மக்கள் குடிநீருக்காக பயன்படுத்திய பழமையான சங்ககால கெண்டிமூக்கு பானை கண்டுபிடிப்பு
- பண்ருட்டி அருகே பழமையான கெண்டிமூக்கு பானை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
- சங்க காலத்தை சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் பகுதி தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புர களஆய்வு மேற்கொண்டானர்.
அப்போது சங்க காலத்தை சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர்.
இதைகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-
பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றில் கடந்த சில மாதமாக மேற்புர களஆய்வு மேற்கொண்ட போது சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து எனதிரிமங்கலம் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது சங்ககால மக்கள் குடிநீர்க்காக பயன்படுத்திய கெண்டிமூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு பகுதிகள் கண்டறியப்பட்டது.
இந்த பகுதியில் இதுபோல கெண்டிமூக்கு பானைகள் நிறைய இருந்து இருக்கலாம் அதற்கான தடயம் தான் உடைந்த கெண்டிமூக்குகள். இதுபோல கெண்டிமூக்கு பானைகள் தமிழகத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில் கீழடி, கொற்கை , உறையூர் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளது.
தற்போது எனதிரிமங் கலம் பகுதியில் கண்டறியப் பட்ட கெண்டிமூக்கு பானை யானது சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் குடிநீர் அருந்துவதற்காக பயன்ப டுத்திய பானை ஆகும்.
இதன் மூலம் பண்ருட்டி பகுதி தென்பெண்யாற்றில் சங்ககால மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்று அறியமுடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.