தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
- தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.
அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.