உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

Published On 2022-09-07 07:29 GMT   |   Update On 2022-09-07 07:29 GMT
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
  • முதல்-அமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

திருமருகல் ஒன்றியம் கொ த்தமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடத்தினையும், 15 நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அறைக்கும் ஆலையினையும், ஏனங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

முதல மைச்சர் பொதுமக்களின் நலனை கருதி இலவச பஸ் பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி போன்ற பல்வேறு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும், நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியும், 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளையும் வழங்கியுள்ளார்.

மேலும் மாணவர்களின் நலன் கருதி நேற்றைய தினம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

நம் முதலமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பொதுமக்கள் அனைவரும் அவ்வாறு அறிவிக்கும் திட்டங்களை பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News