உள்ளூர் செய்திகள்

மானிய விலையில் துவரை விதை விநியோகம்

Published On 2022-07-18 10:00 GMT   |   Update On 2022-07-18 10:00 GMT
  • தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 700 ஹெக்டர் அளவில் இலக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது,
  • நோய் கட்டுப்பாட்டு இடுபொருட்கள் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

பாலக்கோடு,

பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் துவரை விதை வழங்க இருப்பதாக வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி தெரிவித்துள்ளார்.

பாலக்கோடு வட்டாரத்தில் துவரை சாகுபடி பரப்பை விஸ்தரித்து மகசூலை அதிகரிக்கும் நோக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 100 ஹெக்டர் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 700 ஹெக்டர் அளவில் இலக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது,

அதனையொட்டி நடப்பு பருவ மழையையொட்டி விவசாயிகள் துவரை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக தேவையான துவரை விதைகள் பாலக்கோடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தையார் நிலையில் உள்ளது. மேலும் உயிர் உரங்கள், நுண்ணூட்டசத்துக்கள், உயிரியல் நோய் கட்டுப்பாட்டு இடுபொருட்கள் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விதை பெறும் விவசாயி களுக்கு வரிசை நடவு மற்றும் டி.ஏ.பி உர கரைசல், தெளிப்பு தொழில் நுட்பங்களை பின்பற்றுவதற்காக ரூ.2 ஆயிரம் பின்னேற்ற மானியமாகவும் வழங்கப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News