பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்
- மாணவர்களுக்கு தேக்கு, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட 4 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- மரங்களின் தனி சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சீர்காழி ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தாளாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பள்ளி செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் சிவாஜி, துணை மேலாளர் ரஃபிக் அகமது ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேக்கு, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட 4000 மரக்கன்றுகளை வழங்கி பேசினர்.
தொடர்ந்து தாவரவியல் ஆசிரியர் ராம்குமார் மரங்களின் தனி சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரோஜா, எல்ஐசி அதிகாரிகள் தினேஷ், பாபு, அரவிந்தன், நிக்சன், நரேந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள், எல்.ஐ.சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார்.