உடன்குடி அருகே தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- மெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- தலைமைக்கழக பேச்சாளர் பரணி சேகர், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.
உடன்குடி:
உடன்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளருமான பாலசிங் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு வரவேற்றார். உடன்குடி நகரசெயலாளர் சந்தையடியூர் மால்ராஜேஷ், யூனியன் துணை சேர்மன் மீராசிராசூதீன், மாவட்ட பிரதிநிதிகள் மகேஸ்ரவன், தனராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் விஜயா, சுடலைக்கண், இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் பரணி சேகர், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.
இதில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், திருச்செந்துர் நகர அவைத்தலைவர் சித்திரைகுமார், மாவட்ட பிரதிநிதி முபாரக், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சலீம், திருச்செந்துர் ஒன்றிய அவைத்தலைவர் குழந்தைவேல், தலைமை பேச்சாளர் செந்தூர் பால கிருஷ்ணன், மாவட்ட மீனவரணிதுணை அமைப்பாளர் மெராஜ், மாவட்ட விவசாயஅணிதுணை அமைப்பாளர்கள் சக்திவேல், பெத்தாமுருகன், மாவட்ட கலைஇலக்கிய அணி துணைஅமைப்பாளர் ரஞ்சன், பேரூராட்சி கவுன்சிலர் ஜான்ஸ்பாஸ்கர், வக்கீல் சாத்ராக், தி.மு.க. நிர்வாகிகள் ஐசக், அல்பர்ட், பாலமுருகன், தினகர், ஜெயக்குமார், சம்பத், ஜெயசீலன், சார்லஸ், ஜோசப், பசுங்கிளி, டேவிட்ராஜ், ஜெரால்டு, மோசஸ்ராஜதுரை, அகஸ்டின், மகளிரணி நிர்வாகிகள் ஜெயராணி பாப்பா, ஜெபக்கனி, நல்லம்மாள், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. -காங்கிரஸ் கொண்டாட்டம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து உடன்குடி பஜாரில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, கணேசன், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், நகர செயலர் பிரபாகர், திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் தனீஷ், நிர்வாகிகள் சுப்பிரமணியன், லிங்கம், ராஜன், இஸ்ரேல்ஜான், ராமநாதன், அந்தோணி, செல்வன், பாஸ்கர், கோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.