நாசரேத்தில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- நாசரேத் பேரூர் தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என கூட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன் பேசினார்.
நாசரேத்:
நாசரேத் பேரூர் தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாசரேத் பேரூர் செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாக முகவர்களின் கடமைகளையும், பூத் கமிட்டியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று அவர்கள் உள்ளுரில் இருக்கிறார்களா? அல்லது வெளியூர், வெளிநாடுகளில் இருக்கிறார்களா? 80 வயதுக்கு மேற்பட்ட வர்களா? மாற்றுத் திறனாளிகளா? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர்கள் இறந்து விட்டால் அவர்கள் பெயரை நீக்க அதற்குரிய படிவங்களை நிரப்பி உரிய அலுவல ரிடம் கொடுக்க வேண்டும். 1-1-2024 அன்று 18வயது நிரம்பக்கூடியவர்களை புதிதாக வாக்காளர்களாக சேர்க்கவும், விடுபட்ட வாக் காளர்கள், இடம் மாறிய வாக்காளர்கள், சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து, அந்த படிவங்களை, அந்த அந்த முகாம்க ளில் பாக முகவர்களும் பூத் கமிட்டியினரும் திறம்பட செய்து உரிய இடத்தில் சேர்க்க வேண்டும், வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என கூட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன் பேசினார்.
கூட்டத்தில் நகரஅவை தலைவர் கருத்தையா, பாக முகவர்கள் ஞானராஜ், ஜெபசிங், டேவின் சாலமோன், சிலாக்கியமணி, அன்பு தங்கபாண்டியன், சரவணன், ஜீலியட் எபநேசர், சந்திரசேகர், மனோகரன், மாற்கு தர்மகண், ஜேம்ஸ் ரவி, உடையார், எமர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.