உள்ளூர் செய்திகள்

ஒப்பந்த பணிக்கு வந்த லாரி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது

Published On 2023-06-27 08:28 GMT   |   Update On 2023-06-27 08:28 GMT
  • லாரிகளை நிறுத்தி பணம்கேட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் குமரனை கைது செய்தனர்.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சிக் குட்பட்ட அனகாபுத்தூர் இ.பி. காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்கான மாநகராட்சி ஒப்பந்தத்தை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்று செய்து வருகிறது. இதற்காக அனகாபுத்தூர் பக்தவச்சலம் தெரு வழியாக லாரிகளில் கான்கிரீட், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சித்ரா என்பவரது கணவர் தமிழ்குமரன் மாநகராட்சி ஒப்பந்தப்பணிக்கு சென்ற லாரிகளை நிறுத்தி பணம்கேட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் கண்ணன், சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் குமரனை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News