உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

Published On 2022-11-09 08:11 GMT   |   Update On 2022-11-09 08:11 GMT
  • மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்:

நாகையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசால் நடத்தப்படுகின்ற ஐஐடி என்ஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக அதன்பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையினை குடியரசு தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமர்ப்பித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் மெய்யநாதன் குறை கூறினார்.

மேலும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பிற மாநில உரிமைக்காகவும் அதன் மாநில மொழிகளுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்ததாகவும் அதனை தமிழக முதல் அமைச்சர் தற்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

Tags:    

Similar News