தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர்: இளைஞர் அணியினர் தைரியமாக மக்கள் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும்.
- இந்தி திணிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
அமைச்சர் கீதாஜீவன்
மாவட்ட அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும்.
மாநகர பகுதிகளில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு காலை- மதியம் உணவு வழங்கப்படுகிறது. தி.மு.க. கொடியேந்தி இளைஞர் அணியினர் தைரியமாக மக்கள் பணியாற்ற வேண்டும். தி.முக.வில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
ஓவ்வொரு பகுதிகளிலும் எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டங்களை கண்காணித்து அதை தகவலாக தெரிவித்து அதற்கு தகுந்தாற்போல் நாமும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இந்தி திணிப்பு
இந்தி திணிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை. தமிழ் மொழி அழிப்பு என்பது ஓரு இனத்தையே அழிப்பதற்கு சமம், தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் இதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
ஜாதி, மதத்தால் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் எதிர்கட்சி களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவரவர் மத வழிபாடுகளை அவரவர் மேற்கொ ள்ளட்டும். இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
25 மரக்கன்றுகள்
விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பல பிரிவுகளாக பிரித்து கபடி போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு கிளைச்செயலாளரிடம் 25 மரக்கன்றுகன் கொடு க்கப்பட்டு எல்லோருடைய வீட்டிலும் மரம் வளர்க்க வழிவகை செய்யப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
அடுத்து அமையவுள்ள ஆட்சியில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வரும். முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு விளாத்திகுளம் தொகுதி முழுமையாக ஓத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானம்
கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகி களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது, இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகமாக விரைந்து சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர துணைச் செயலளார் பிரமிளா, ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், முருகேசன், ராதா கிருஷ்ணன், சின்ன மாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், கருப்பசாமி, டேவிட்ராஜ், மகேந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முத்துராமன், செல்வின், சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த கபரியேல்ராஜ் நன்றி கூறினார்.