உள்ளூர் செய்திகள்

கடலூரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

கடலூரில் தி.மு.க. சார்பில் நீட் தேர்வு-கவர்னரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-08-20 08:32 GMT   |   Update On 2023-08-20 08:32 GMT
  • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
  • பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்து வர் அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், கவர்ன ரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்ட த்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழி லாளர் நலத்துறை சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் இள. புகழேந்தி, சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பி னர் குறிஞ்சிப்பாடி பால முருகன், ஒன்றிய செய லாளர்கள் பொறியாளர் சிவக்குமார், காசிராஜன், சுப்பிரமணியன், நாராயண சாமி, வெங்கட்ராமன், தனஞ்ஜெயன், விஜய சுந்தரம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கணேஷ் குமார், மருத்துவர் அணி டாக்டர் கலைக்கோவன், நகர மன்ற தலைவர்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவகுமார், சங்கவி முருகதாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி செய லாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, வெங்கடேசன், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி , மண்டல குழு தலை வர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், கார் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கப்பட்டு இன்று மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது.

Tags:    

Similar News