கிண்டி அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - திருச்சியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
- மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
- இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி:
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவ மனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் எரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முன்பு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்திய மருத்துவ கழகம் ஆகியோர் இணைந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்து மருத்துவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் அருளீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மூத்த மருத்துவர்கள் அஷ்ரப், குணசேகரன், இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.